பிரான்ஸ் அரசு அதிரடி! நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்
பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பாக உள்துறை அமைச்சர் திடீர் முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

16ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி ஆசிரியர் கொல்லப்பட்டமையின் எதிரொலியாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் தீவிரவாதத்துடன் சம்பந்தமுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ள 230 இஸ்லாமியர்களை உடனடியாக அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி குறிப்பிட்ட பிராந்தியங்களில் மாவட்ட ஆட்சியாளர்கள் இந்த இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இஸ்லாமிய தீவிரவாத தொடர்புடையவர்களை நாடு கடத்துவது என்கின்ற முடிவு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கல்லூரி ஆசிரியரின் படுகொலை, குறிப்பிட்ட நடவடிக்கையைத் துரிதப்படுத்தவைத்துள்ளது.

ஆசிரியர் Samuel Paty அவர்களுக்கு அனுதாப அஞ்சலி நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் பரிஸ் நகரம் உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளன.

கொரோனா பேரிடரைக் கருத்தில் கொள்ளாது பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டு இஸ்லாமிய தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியருக்கு அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

பரிஸ் Place de la Republique கில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பிரதமர் John Castex கலந்து கொண்டார்.

இவருடன் பாரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo, Ile de France மாகாணத் தலைவி Valeri Pecresse, தீவிர இடதுசாரிக் கட்சித் தலைவர் John Luc Melonchen ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post