ஏஎல் பரீட்சை எழுதவுள்ள மாணவனுக்கு கோரோனா தொற்று!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவன் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராய்ச்சிக்கட்டுவைச் சேர்ந்த மாணவனுக்கே இவ்வாறு கோவிட் -19 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

மாணவனுக்குத் தொற்று ஏற்பட்ட வழி தொடர்பில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன், கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்றதாகக் கூறப்படுகிறது. மாணவன் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள் மற்றும் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post