சுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுவிஸ்லாந்தில், செம்பியன்பற்றை (மாமுனை) பிறப்பிடமாக கொண்ட யாழ். குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் மாலைவேளை (Littau) லித்தவ் பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைக்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையை குறித்த குடும்பத்தார் கடக்கும் போது கார் ஒன்று மோதியதில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் அதன்போது பின்னால் வந்த பேருந்து கவனக்குறைவால் மீண்டும் அவரை மோதித்தள்ளியது.

இதன்போது காரின் பின்பகுதியில் மிகவும் பலமாக தாக்கப்பட்ட அவர் ஆபத்தான நிலையில், உலங்கு வானூர்தி மூலம் சூரிச் தள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post