பிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கட்டுப்பாட்டை மீறி தப்பிச் செல்ல முற்பட்ட மகிழுந்து சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.

நள்ளிரவுக்கும் இன்று காலைக்கும் (17/10/2020) இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிசைச் சேர்ந்த இரவு நேர காவல்துறையினர் (BAC 75N படைப்பிரிவு) வீதி கண்காணிப்பில்ஈடுபட்டிருந்தனர்.

2:10 மணி அளவில் சந்தேகத்துக்கு இடமான Renault Clio மகிழுந்து ஒன்று வீதியில் வருவதை கவனித்து, மகிழுந்தை நிறுத்தும் படி அதன் சாரதிக்கு பணித்தனர். ஆனால் சாரதி மகிழுந்தை நிறுத்தாமல்காவல்துறையினரை இடிக்கும் நோக்கோடு தொடர்ந்து முன்னேறினார். அதைத் தொடர்ந்து A13 நெடுஞ்சாலையில் Yvelines நகர் நோக்கி தப்பி ஓடியுள்ளார்.

காவல்துறையினர் பின்னால் துரத்திச் சென்றனர். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இந்த துரத்தல் நீடித்தது. பின்னர் சாரதி Poissy (Yvelines) நகரின் rue de Villiers வீதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு நிறுத்தப்பட்டார்.

இதில் மகிழுந்து சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகிழுந்துக்குள் இருந்த 29 மற்றும்33 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரண்டு மணித்தியாலத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
Previous Post Next Post