யாழில் கரித்தாஸ்-கியூடெக் நிறுவனத்தின் தீபாவளிக் கொண்டாட்டம்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இயக்குனர் அருட்பணி ச.இயூஜின் பிரான்சிஸ் அடிகளின் தலைமையில் இடம்பெற்றது. 

கடந்த திங்கட்கிழமை (16) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் கியூடெக் உத்தியோகத்தர்களும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்துக் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் இயக்குனர் அருட்பணி ச.இயூஜின் பிரான்சிஸ் அடிகளார் தனது தலைமையுரையில், எமது கலாசார பண்பாடுகள், ஆன்மீக விழுமியங்கள் கொண்டாடப்பட வேண்டும். தீயவர் அழிந்த தினத்தை தீபாவளியாகக் கொண்டாடும் போது எம்மிடம் இன்று கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா (Covid 19)அழித்திட ஆன்மீக சக்தியை ஒன்றிணைத்து பிரார்த்திப்பது அவசியம் என்றார். 

சிறப்புரை ஆற்றிய சிவசிறீ சுபாஸ்கரக் குருக்கள், சமயங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது இனமத நல்லுறவுக்கு பலம் சேர்க்கின்றது. தீமைகள் ஒழிந்து நன்மைகள் நடைபெற எமது மக்களின் துயர் களைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதன் மூலம்தான் எமது நாட்டில் இன்று இருள்சூழ்ந்து கொடுமைப்படுத்துகின்ற கொரோனா (Covid 19) வைரசை விரட்ட, இருளகற்றும் ஒளியாக மக்கள் நற்சிந்தனையுடன் இவ் விழாக்களை கொண்டாடுவது சிறப்பாகும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் அருட்பணி எமில் போல் அடிகளார், அருட்தந்தை எறிக் றொசான் அடிகளார், யாழ் நாகவிகாரை தேரர் வண. தர்மதேரர் மற்றும் யாழ் பள்ளிவாசல் வண. மௌலவி.யு.ஆ.ரலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். அத்தோடு சிறுமிகள் தீப நடனத்தை அரங்கேற்றி சிறப்பித்தனர்.






Previous Post Next Post