
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குறிப்பாக 50 சதவீத மெற்றோ சேவைகள் சன நெருக்கடி இல்லாத நேரங்களில் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வேலை நேரங்களில் காலையிலும் மாலையிலும் அதிகளவான மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் இந் நேரங்களில் மெற்றோ சேவைகள் குறைக்கப்படாது.
ஆனால் இது தவிர்ந்த நேரங்களில் மக்கள் தற்போது பயணங்களை அதிகளவில் குறைத்துக் கொண்டுள்ளதால் இக் காலப் பகுதியில் இடம்பெறும் மெற்றோ சேவைகள் 50 வீதமாகக் குறைக்கப்படவுள்ளது.
மெற்றோ சேவைகள் காலை 5.30 மணியிலிருந்து 10 மணிவரை 100 சதவீதம் இடம்பெறும் என்றும், இதேபோன்று மாலை 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரையும் 100 சதவீதம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெறும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு 50 சதவீதமே இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் 1 ஆம், 13 ஆம், 14 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் குறைக்கப்படாமல் 100 சதவீதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RER சேவைகள் சில ரயில்கள் ரத்துச் செய்யப்படும் என்றும் ஆனால் இச் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ட்ராம் மற்றும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளிருப்புக்கு முன்பான கால கட்டத்தில் 30 சதவீதம் பொதுப் போக்குவரத்துக்கள் குறைந்திருந்ததாகவும், இப்போது குறிப்பாக இரவு 10 மணிக்குப் பின் 10 வீதமான மக்களே பொதுப் பொக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துகின்றார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.