பிரான்ஸ் கொரோனாவை வெல்லவில்லை! உள்ளிருப்பு வெளியேற்றம் தற்போது சாத்தியமில்லை!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று நடந்த பாதுகாப்புச் சபைக் கூடட்த்தின் முடிவில் பத்திரிகையளார்களைச் சந்தித்த, அரசாங்கன் ஊடகத் தொடர்பாளரும், பேசவல்லவருமான (porte-parole du gouvernement) கப்ரியல் அத்தால் (Gabriel Attal), பிரான்ஸ் கொரோனா வைரஸ் தொற்றினை வெல்வதற்கு, இன்னமும் நீண்ட தொலைவு உள்ளது. 

முதற் தொற்றுக் காலத்தின் உச்சக் கட்டத்தில் இருந்ததைவிட அதிகத் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4854 பேர் தீவிரசிக்சிசைப் பிரிவில் உள்ளனர். சாவுகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைக்கு உள்ளிருப்பில் இருந்த வெளியேறுவது என்பது சாத்தியம் அற்றது. சில 'மாற்றங்கள்' மட்டுமே அறிவிக்கப்படும். உள்ளிருப்புக் கட்டுப்பாடு தொடரும் எனவும் அமைச்சர்களின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தினை மேற்கோள் காட்டி, கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post