யாழில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு நடந்த துயரம்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம், கொடிகாமம் புலோலி வீதி புனரமைப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர் ஒருவர் ரோலர் இயந்திரத்தில் சிக்குண்டு  உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் வடமராட்சி முள்ளிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 62 வயதுடைய பலாங்கொடையைச் சேர்ந்த பி. பிரேமரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

புலோலி - கொடிகாமம் வீதிப் புனரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முள்ளிப் பகுதியில் பணியில்ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரோலர் இயந்திரம் அவர் மீது ஏறியது. இதனால் படுகாயங்களுக்கு உள்ளான அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post