யாழில் கொரோனாத் தொற்று இல்லாத குடும்பஸ்தரையும் சிகிச்சையில் சேர்த்த அதிகாரிகள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனா வைரஸ் தொற்று இல்லாத ஒருவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்த்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலால் குடும்பஸ்தர் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

மருதனார்மடம் பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை நடத்தும் குடும்பஸ்தர் ஒருவர், சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். அவரிடமும் மாதிரி பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இருப்பினும் அதன் பெறுபேறு நேற்றுவரை அவருக்குத் தெரியப்படுத்தாத நிலையில் நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் குழுவினர், “உங்களுக்குக் கொரோனா; சிகிச்சை நிலையத்துக்கு உடன் வாருங்கள்” என்று கூறி அழைத்தனர்.

இதனால் குறித்த நபரும் வாகனத்தில் ஏறிப் பயணித்துள்ளார்.

அவருடன் கூட சுன்னாகம் – கண்ணகி முகாமில் வசிக்கும் ஒரு கொரோனா நோயாளியையும் ஏற்றிக்கொண்டு வேறு ஒருவரது முகவரியைத் தேடித் திரிந்த சுகாதார அதிகாரிகள், அதன்பின்னர் கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு வந்தடைந்தனர்.

அதன்போது கோப்பாய் கல்வியல் கல்லூரி வாசலில் பதிவேட்டைப் பரிசீலித்தவர் கொரோனா நோயாளர் பெயர்ப்பட்டியலில் குறித்த

குடும்பஸ்தரின் பெயர் இல்லை எனக் கூறி அவருடன் வந்த இரண்டாவது நோயாளியை மட்டும் சிகிச்சை நிலையத்துக்கு அனுமதித்தார்.

இதையடுத்து குறித்த குடும்பஸ்தர் மீண்டும் அதே வாகனத்தில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டார்.

தான் கொரோனா நோயாளியுடன் வாகனத்தில் பயணித்தமையால் தனக்கு உண்மையில் கொரோனாத் தொற்று ஏற்படுமோ என அவர் அஞ்சி மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பில் அவரின் குடும்பத்தினர் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.a
Previous Post Next Post