தனியார் கல்வி நிலையங்கள் மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது அரசு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை வரும் ஜனவரி 25ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு கல்வித்துறையில் தற்போதைய நெருக்கடி நிலமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

தனியார் கல்வி நிலையங்கள் மீண்டும் தொடங்க முடியாததால் மாணவர்கள் மற்றும் கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்த போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், தனியார் கல்வி நிலையங்களை மீள ஆரம்பிக்கவும் ஜனவரி 25ஆம் திகதி தொடக்கம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக தனியார் கல்வி நிலையங்கள் கடந்த ஒக்டோபர் முதல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post