யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!


 
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு மூடப்படும்.

வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

யாழ்ப்பாணம் கல்வி வலயம் தவிர்ந்த ஏனைய கல்வி வலயங்களில் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் வழமை போல இடம்பெறும்- என்றார்.
Previous Post Next Post