புத்தாண்டில் யாழில் துயரம்! சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்!!


தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் 8 வயதுச் சிறுவன் மோட்டார் சைக்களை இயக்கியவேளை அருகில் இருந்த அவரது சகோதாரியான ஒன்றரை வயதுக் குழந்தை சில்லுக்குள் சிக்குண்டு இறந்த பரிதாப சம்பவம் புத்தாண்டு தினமாக இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டுவில் - துா்க்கைம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தில் கஜேந்திரன் சுவேசனா என்ற குழந்தையே உயிரிழந்தது.

வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த தாயாரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 8 வயதுச் சிறுவன் விளையாட்டாக இயக்கியுள்ளார். இதன்போது மோட்டார் சைக்களில் சீறிப் பாய்ந்து கிழே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயதுச் சிறுமியின் வயிற்றின் மேல் ஏறியது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் சடலம் அங்கிருந்து மரண விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Previous Post Next Post