யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக கந்தவனச்செல்வன் பதவியேற்பு! (படங்கள்)

யாழ். செங்குந்த இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக இன்றைய தினம் அதிபர் சேவை தரம் 1 ஐ சேர்ந்த நடராஜா கந்தவனச்செல்வன் பதவியேற்றுள்ளார்.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபட்டை மேற்கொண்டு, கல்லூரிச் சமுகத்தின் வரவேற்புடன் தனது கடமைகளை அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பழைய மாணவர் சங்கத்தினாலும், நொதேண் விளையாட்டுக் கழகத்தினாலும் வரவேற்கப்பட்ட புதிய அதிபர், இன்றைய தினமே போசகராகக் கடமையாற்றுவதற்கு சம்பிரதாயபூர்வமாக ஆவணமும் கையளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post