குறிகாட்டுவான் கடலில் மூழ்கியது கடல் பாதை! மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படைச் சிப்பாய் உயிரிழப்பு!!

குறிகாட்டுவான் துறைமுகத்தில் கடலுக்குள் மூழ்கியுள்ள பாதையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

காலியைச் சேர்ந்த லலிந்த பெரேரா (வயது-28) என்ற கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

குறிகாட்டுவான் – நயினாதீவு இடையே பயன்படுத்தப்படும் கடல் பாதை படகு குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு அண்மையில் கடலில் மூழ்கியுள்ளதால் அதனை மீட்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post