பயணத்தடை ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பு!


நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடைக் கட்டுப்பாடுகள் ஜூன் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முன்னதாக ஜூன் 07 அன்று அதிகாலை 4 மணிக்கு தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று தீவிரம் குறைவடையாத நிலையில் பயணத்தடை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை மே மாதம் 21ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post