யாழில் கொரோனா! இன்று: நால்வர் உயிரிழப்பு!! 44 பேருக்குத் தொற்று!!!


யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
Previous Post Next Post