
குறித்த கடலாமை நேற்றையதினம் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.
கரையொதுங்கிய குறித்த கடலாமையின் நீளம் 28 இஞ்சி ,அகலம் 22 இஞ்சி மற்றும் சுற்றளவு 63 இஞ்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



