பிரான்ஸ் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு யுவதி விமான நிலையத்தில் கைது!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை கட்டார் நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் பயணித்து கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி செல்லவுள்ள மாங்குளத்தினை சேர்ந்த 25 அகவையுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது போலியான பி.சி.ஆர்.அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு சென்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post