புதுக்குடியிருப்புப் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்! (படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறையில் உள்ள பயணத் தடை உத்தரவு காரணமாக நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டபுதுக்குடியிருப்பு மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில், அப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50  குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, புதுக்குடியிப்புப் பிரதேச செயலர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். Previous Post Next Post