நள்ளிரவு ஒரு மணிக்கு கார் விபத்து! பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்... தோழி மரணம்! (வீடியோ)

இசிஆர் சாலையில் நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்த நிலையில் உடன் இருந்த அவர் தோழி உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காரில் பயணித்த பிக்பாஸ் புகழ் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி (வயது 28), என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் தோழி என்பதும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தால் ஏற்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Previous Post Next Post