பேஸ்புக் காதலியின் நிர்வாணப் படங்களை வைத்துக் கப்பம் கோரிய பிரிட்டனில் வசிக்கும் யாழ். இளைஞன்!


பெண் ஒருவரின் பிரத்தியேக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி, பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவரால் கப்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுப்பப்பட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை பிரிவினால் நேற்று கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வசிக்கும் இருவர் 7 இலட்சம் ரூபா கப்பம்பெற முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்னர் வட்சப் ஊடாக பிரித்தானியாவை வதிவிடமாகவும் யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நபர் ஒருவருடன் தொடர்பை பேணி வந்துள்ளார். 

இதன்போது இணையத்தின் ஊடாக இருவரும் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இருவரும் தொடர்பில் இருந்தபோது வட்சப் ஊடாக பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பிரித்தானியாவில் வசிக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.

புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு சந்தேகநபர் குறித்த பெண்னிடம் 17 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளார். இதன்போது 7 இலட்சம் ரூபாவை தருவதாக பாதிக்கப்பட்ட பெண் குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார். 

கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று குறித்த நபரால் கப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு கொம்பனித் தெருவிற்கு அனுப்பப்பட்ட இருவர் கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடளித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது அவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இதுவரை நேரில் கண்டதில்லை எனவும் சமூக வலைத்தளங்களின் ஊடாக மாத்திரமே தொடர்பைப் பேணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளரார். பிரித்தானியாவில் வசிப்பதாகக் கூறப்படும் நபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post