யாழ்.புங்குடுதீவு - குறிகாட்டுவான் கடற்கரையில் கரையொதுங்கும் மருத்துவக் கழிவுகள்! (படங்கள்)


யாழ்.புங்குடுதீவு - குறிகாட்டுவானில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மருத்துவ கழிவுகளே இவ்வாறு கரையொதுங்கிவருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இலட்சினைகள், பெயர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக யாழ்.நெடுந்தீவு, நயினாதீவு கரையோரங்களில் இவ்வாறான மருத்துவ கழிவுகள் ஒதுங்கியிருந்தது.

இந்நிலையில் அவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும் என மாகாண சுகாதார பிரிவினர் மற்றும் கடல்வள பாதுகாப்புடன் தொடர்புடையோர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறிகாட்டுவான் பகுதியில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன.Previous Post Next Post