யாழில் முதலாவது தடுப்பூசியை ஏற்றிய பெண் திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீர் உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த பெண் நேற்றைய நாளே முதலாவது கொரோனாத் தடுப்பூசியினைப்  பெற்றுக் கொண்டவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு திடீர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பெண் ஏற்கனவே நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
Previous Post Next Post