யாழ்.வரணியில் பயணிகள் பேருந்து மீது டிப்பர் மோதியது! மூவர் படுகாயம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் வரணி - கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பயணிகள் பேருந்து மீது டிப்பர் வாகனம் மோதியபோதே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து வரணி - கொடிகாமம் வீதியில் வரணிச் சந்திப் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது.

படுகாயம் அடைந்த பயணிகள் மூவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post