இந்தியத் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சிக்கு 2.5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலில் கடந்த மே மாதம் ஒளிபரப்பான காட்சிக்காக தற்போது Broadcasting Content Complaints Council (BCCC) இரண்டரை லட்சம் ருபாய் அபராதம் விதித்துள்ளது.
மெட்டி ஒலி புகழ் திருமுருகன் இயக்கி நடித்துள்ள இந்த சீரியலில் வில்லி சில ரௌடிகளிடம் தன் சொந்த சகோதரியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய சொல்வது போல ஒரு காட்சி ஒளிபரப்பானது.
அதன்பிறகு ஜூன் 28ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அந்த பாலியல் குற்றவாளிகளை அதிகம் வன்முறையான வகையில் தண்டிக்கும் ஒரு காட்சியும் ஒளிபரப்பப்பட்டிருந்தது.
இது பற்றி வந்த புகாரை அடுத்து BCCC சன் டிவி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அபராதம் மட்டுமின்றி அடுத்த வாரம் முழுவதும் (செப்டம்பர் 23 முதல் 28 வரை) இந்த சீரியல் ஒளிபரப்பும் முன்பு இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.