இலங்கையில் தொடரும் கொரோனா தொற்று அதிகரிப்பு! மேலும் 11 பேர் பாதிப்பு!!

கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 இன்று (ஏப்ரல் 22) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

104 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post