மே-11க்குப் பின் பாரிய ஆபத்தை எதிர்நோக்கப் போகும் பிரான்ஸ்! அச்சத்தில் மக்கள்!! (வீடியோ)

உள்ளிருப்புக் கட்டுப்பாடு இருக்கும் போதே மெட்ரோக்களில் பயணிக்கும் மக்களின் செயற்பாடுகள் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இங்கு எந்தவிதமான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை யாரும் பேணவில்லை.

 13ம் இலக்க மெட்ரோவில் எந்தவிதமான சமூக இடைவெளிக் கட்டுப்பாடோ, முகக்கவசங்களோ, கையுறைகளோ இன்றி இடிபட்டு ஏறும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளது.

சாதாரண காலத்தில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் மக்களும், வருடத்திற்கு 47 பில்லியன் (4700 மில்லியன்) மக்களும் இல்-து-பிரான்ஸில் பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர். இதனை SNCF மற்றும் RATP  பொருட்படுத்த இல்லை.

இப்போது வெறும் 30% போக்குவரத்துக்கள் மட்டுமே இயங்குவதாகவும், வெறும் 500.000 மக்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்துக்களை உபயோகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந் நிலையில் இப்பொழுதே எந்தச் சுகாதாரக் கட்டுப்பாடுகளையும் எவரும் பேணாமலும், அடிப்படையான ஒரு மீற்றர் இடைவெளியைக் கூடப் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.

இது இவ்வாறிருக்க மே 11 இற்குப் பின்னர் போக்குவரத்துக்கள் இரட்டிப்பாகும் போதும் பயணிகள் தொகை பலமடங்கு உயரும். இதனால் பேராபத்து உருவாகும் நிலை உள்ளதாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அரசாங்கம் பேச்சளவில் சொல்லும் சுகாதாரப் பாதுகாப்புக்கள் ஒன்றும் நடைமுறையில் இல்லாத நிலையில் இனிமேலும் இருக்குமா என்ற சந்தேக நிலை உருவாகியு்ளது.

உள்ளிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றுவது பெரும் உயிரழிவை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post