கனடாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3 யாழ்.பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் அநியாயம்! (வீடியோ)

அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றினால், கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாய், தந்தையர் உயிரிழந்திருந்தனர்.

தற்போது இறந்தவர்களின் சிறியமகனான ஐங்கரன் கதிர்காமநாதன், சமூக ஊடகம் ஊடாக பலதரப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது, குறித்த பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் அவர்களின் குடும்ப நண்பி ஒருவர் தானாக முன்வந்து மனிதாபிமான அடிப்படையில், நிதி சேகரிக்கும் நிறுவனம் ஊடாக அவர்களுக்கு நிதியினைச் சேகரித்துள்ளார்.

ஆனால் இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதி, குறித்த நிறுவனத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுமா என்பது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந் நிலையில் கனடாவிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர், இக் குடும்பத்துக்கு உதவுவதற்கும், இறந்தவர்களின் இறுதிக் கிரியைகளை நடாத்துவதற்கும் நிதிப் பங்களிப்புச் செய்யுமாறு பதிவு செய்துள்ளார்.

இப் பதிவு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து தனது கருத்தினை கண்ணீருடன மீள்பதிவு செய்துள்ளார் ஐங்கரன் கதிா்காமநாதன். இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இறந்த குடும்பஸ்தர், குறித்த உதயன் பத்திரிகையின் விநியோகத்தராக பகுதி நேரமாகப் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post