யாழ்ப்பாணத்திலும் ஊரடங்குச் சட்டம் தளர்கிறது!

நாளை மறுதினம் (ஏப்ரல் 20) திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் உட்பட 18 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்குச் சட்டம் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்குத் தளா்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Previous Post Next Post