லண்டனில் கர்ப்பிணித் தாய்க்குக் கொரோனா! குழந்தை பிரசவித்த பின் உயிரிழப்பு!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட கற்பவதியான செவிலித் தாய் ஒருவா் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவித்த பின்னா் உயிரிழந்தார்.

அவரது பெண் குழந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சனல்-4 நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

உயிரிழந்த 28 வயதான தாய் ஒரு அற்புதமான செவிலியர் என அவா் பணிபுரிந்த அறக்கட்டளையில் நிர்வாகி தெரிவித்துள்ளார். கற்பதியான அந்த செவிலித் தாய் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் சத்திர சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெற்றதாகவும் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எனது மகளின் மறு பிறவிதான் என் பேரக் குழந்தை என இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். இருண்ட எங்கள் வாழ்வில் ஒளியாக அந்தக் குழந்தை கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியள்ளார்.
Previous Post Next Post