கனடாவில் யாழ்.தீவகத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்குப் பலி!

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா என்பவரும் நெடுந்தீவைச் சேர்ந்த அவருடைய துணைவியாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் மனைவி உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த கணவர் இன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி: கனடாவில் கொரோனாத் தொற்று! மனைவி உயிரிழப்பு!! ஆபத்தான நிலையில் கணவன்!!!


Previous Post Next Post