கனடாவில் கொரோனாத் தொற்று! மனைவி உயிரிழப்பு!! ஆபத்தான நிலையில் கணவன்!!!

தமிழ் புது வருடம் பிறந்து புலம்பெயர் நாடுகளில் இன்று மட்டும் 5க்கும் மேற்பட்ட தமிழர்களை பலி எடுத்துள்ளது கொரோனா ரைவஸ்.

அந்தவகையில், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்து வந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) என்பவா் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்தக் குடும்பத்தின் தந்தை பிரம்டன் வைத்தியசாலையில் இரண்டு வாரகாலத்திற்கு மேலாக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சுய நினைவுகள் அற்ற நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ளார்.

தாயார் ஒரு வாரத்திற்கு முன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் மதியம் மரணமாகியுள்ளதாக அறிமுடிகிறது.

3 பெண் பிள்ளைகளைக் கொண்ட இந்த குடும்பத்தில் பிள்ளைகள் அனைவருக்கும் நோய்ப் பாதிப்பு உள்ளாதாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மூவரும் அவா்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post