மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது.
ஜாஎல – சுதுவெல்ல என்ற இடத்தில் உள்ள நாய் ஒன்றுக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேல் மாகாண விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை பணிப்பாளர் அலுவலகம் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் என்பன மறுத்துள்ளன.
இதேவேளை, கோவிட் -19 தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் உள்ளோரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.