மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை திடீர் இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையால் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிப்பதற்கு வாய்ப்பிருபதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post