நாளை தற்காலிகமாகத் தளர்கிறது ஊரடங்கு! அபாய வலயங்களுக்கு இல்லை!!

அரசாங்கத்தினால் அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளை மாலை 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலப்பகுதிகளில் மிகவும் அவசியமான பொருட்களை மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post