யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

தவறான முடிவெடுத்ததில் இளைஞன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (20) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த சிவஞானசுந்தரம் திவாகரன் (வயது-21) என்ற இளைஞனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

Previous Post Next Post