கொழும்பு அபாய பகுதியிலிருந்து லொறியில் தப்பி வந்த நபரால் யாழ்ப்பாணத்துக்கு கொரோனா ஆபத்து!

நாட்டில் கோரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்குத் தப்பி வந்துள்ளார்.

இவ்வாறு தப்பி வந்தவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், அவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றி வந்த பாரவூர்தியிலேயே அவர் தப்பி வந்துள்ளார். தகவலறிந்த வலி.மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள், அவரைத் தேடிக் கண்டறிந்து வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Previous Post Next Post