யாழ். ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தனக்குத் தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
Previous Post Next Post