பிரான்ஸில் மே-11 உள்ளிருப்பிலிருந்து வெளியேற்றம் உறுதிப்படுத்தப்பட்டது! (வீடியோ)

தொடர்ந்தும் கேள்விக்குறியாக இருந்த உள்ளிருப்பு வெளியேற்றத்திற்கான (Déconfinement) பதில்இ இன்றைய பிரதமரின் செவ்வியில் உறுதிப்படுத்தப்பட்டது.

இன்று மாலை 16h00 மணிக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிச் செவ்வியில், பிரதமர், சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர், தேசியக் கல்வியமைச்சர், உள்துறை அமைச்சர், பொருளாதாரம் மற்றும் நிதிக்கான அமைச்சர், தேசியப் போக்குவரத்து அமைச்சர், தொழிற்துறை அமைச்சர் ஆகியோர் மே 11 இற்குப் பிறகான நடைமுறைகளைத் தெரிவித்திருந்தனர்.

பிரான்சில் 32 மாவட்டங்கள் தொடர்ந்தும் சிவப்பு மாவட்டங்களாகத் தொடர்கின்றன. மற்றவை பச்சை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பச்சை மாவட்டமோ அல்லது சிவப்பு மாவட்டமோ, பிரான்ஸ் முழுமைக்கம் அதன் கடல்கடந்த மாகாணங்களிற்கும், மே 11 உள்ளிருப்பு வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக மயோத் தீவு மட்டும் தொடர்ந்தும் உள்ளிருப்பில் இருக்கும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் முழுவதும் தொடர்ந்தும் சுகாதார நடவடிக்கைகள், சமூக இடைவெளி, முகக்கவசங்கள் என அறிவிக்கப்பட்டாலும், இல்-து-பிரான்ஸ் உட்பட 32 சிவப்பு மாவட்டங்களிலும், மிகவும் இறுக்கமான நடவடிக்கைகள், கண்காணிப்புகள், அபராதம் என்பன தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post