யாழ்.நீர்வேலியில் கசிப்பு காய்ச்சிய இளம் பெண் கைது!

நீர்வேலிப் பகுதியில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 8 போத்தல் கசிப்பு மற்றும் 24 போத்தல் கோடா காய்ச்சுவதற்கான உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சப்படுவதாக கோப்பாய் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நீர்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 போத்தல் கசிப்பு மற்றும் 24 போத்தல் கோடா கைப்பற்றப்பட்டதுடன் காய்ச்சுவதற்கான உபகரணங்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நீர்வேலிப் பகுதியில் 8 போத்தல் கசிப்பினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post