பிரான்ஸ் - பரிசில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! மூடப்படும் 60 மெட்ரோ நிலையங்கள்!!

பிரான்ஸின் பிற பகுதிகளில் முடக்கநிலை தளர்த்தப்படும்போது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பரிஸில் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமென பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 17ஆம் திகதி பிரான்ஸ் முடக்கப்பட்டது. எனினும், தற்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு எதிர்வரும் 11ஆம் திகதி பிரான்ஸ் வழமைக்கு திரும்பவுள்ளது.

இந்தநிலையில் தலைநகர் பரிஸ் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்குமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோய்த்தொற்றுகளின் வீதத்தின் அடிப்படையில் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சமூக விலகல் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் அதேவேளை தொற்றுக்கள் அதிகரிக்குமாயின் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை பாரிசிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள 302 மெட்ரோ நிலையங்களில், 60 நிலையங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் வழங்கப்பட்டுள்ளது.

மே 11 அன்று பாரிசில் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட உள்ளதாகப் பிரான்சின் போக்குவரத்துகளுக்குப் பொறுப்பான அரசாங்கச் செயலாளர் Jean-Baptiste Djebbari நேற்று (08) அறிவித்திருந்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை மே 11ம் திகதி, பாரிசில் 60 மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் மெட்ரோ நிலையங்கள் மே 11 மூடப்பட உள்ளன. அதற்கான வரைபடமும் வழங்கப்பட்டுள்ளது.
ligne 2 : Courcelles, Victor Hugo, Place de Clichy, Stalingrad, Villiers, Barbès-Rochechouart.
ligne 3 : Bourse, Malesherbes, Havre-Caumartin, Villiers, Opéra, République.
ligne 4 : Alésia, Saint Placide, Barbès-Rochechouart, Raspail, Strasbourg Saint-Denis
ligne 5 : Stalingrad, Bréguet-Sabin, Campo-Formio, Hoche, Jacques Bonsergent, Laumière, Quai de la Rapée, République.
ligne 6 : Raspail, La Motte-Picquet Grenelle.
ligne 7 : Stalingrad, Cadet, Danube, Pierre et Marie Curie, Porte de Choisy, Tolbiac, Opéra.
ligne 7 bis : Buttes-Chaumont.
ligne8 : Strasbourg Saint-Denis, Félix Faure, Filles du Calvaire, Ledru Rollin, Liberté, Lourmel, Maisons-Alfort Stade, Michel Bizot, Grands Boulevards, Opéra, Porte de Charenton, La Motte-Picquet Grenelle, République.
ligne 9 : Havre-Caumartin, Strasbourg Saint-Denis, Grands Boulevards, Alma Marceau, Charonne, Exelmans, Jasmin, Maraîchers, République.
ligne 10 : Cardinal Lemoine, Chardon Lagache, Charles Michels, Ségur, Vaneau, La Motte-Picquet Grenelle.
ligne 11 : Jourdain, Rambuteau, République.
ligne 12 : Abbesses, Assemblée Nationale, Jules Joffrin, Marx Dormoy, Notre-Dame de Lorette, Rennes, Rue du Bac, Volontaires.
ligne 13 : Place de Clichy, Brochant, Liège, Pernéty.
Previous Post Next Post