கசிப்பு உற்பத்தி இடம் கோப்பாய் பொலிஸாரால் சுற்றிவளைப்பு! (படங்கள்)

கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீரசிங்க தலைமையில் மேற்கொண்ட இத் திடீா் சுற்றிவளைப்பின் போதே இவை மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்திகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Previous Post Next Post