பசிக் கொடுமையால் நாயின் சடலத்தை உண்ணும் நபர்! பார்ப்போரைப் பதற வைக்கும் காட்சி!! (வீடியோ)

இந்தியாவில் பசி கொடுமையால் நபர் ஒருவர் வீதியில் அடிபட்டுக் கிடக்கும் நாயின் உடலை சாப்பிடும் பதற வைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருப்பெற்றதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் சர்வதேச ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அதிலும் குறிப்பாக அமெரிக்காஇ இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா போன்ற நாடுகளில் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

தற்போது இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. தற்போதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3,435 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 45,300 பேர் குணமடைந்துள்ள நிலையில் மிகுதி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள் ஊரடங்குச் சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பலரும் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பசி கொடுமையால் நபர் ஒருவர் வீதியில் அடிபட்டுக் கிடக்கும் நாயின் உடலை சாப்பிடும் பதற வைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.

டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில்இ நாய் ஒன்று விபத்தின் காரணமாக அடிபட்டு வீதியில் இறந்து கிடந்துள்ளது. நபர் ஒருவர் பசி தாங்க முடியாமல் நாயின் சடலத்தை சாப்பிடுகிறார்.

அப்போது அந்த வழியே சென்ற நபர் ஒருவர் குறித்த நபரை அதை சாப்பிடாதே என்று கூறியும், அவர் தொடர்ந்து சாப்பிட முயற்சி செய்ய, உடனே சாப்பாடு மற்றும் தண்ணீரை அவருக்கு கொடுக்கிறார். இதையடுத்து அந்த நபர் அந்த சாப்பாடு மற்றும் தண்ணீரை அருந்துகிறார்.

இவை அனைத்தும் டுவிட்டரில் ஒருவர் வெளியிட்ட காணொளி மூலம் வைரலாகி பார்ப்போர் மனதை பதற வைக்கின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல லட்சம் குடும்பங்கள் ஏழ்மையில் சிக்கி தவிக்கும், ஏராளமானோர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இறப்பார் என்று புள்ளி விவரங்கள் கூறி வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அதற்கு உதாரணமகா நடந்துள்ளது.

அத்துடன் இந்த கொடிய கொரோனாவால் சர்வதேச ரீதியில் 6 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர் என உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post