அவசரகால நிலையை மேலும் இரண்டு மாதங்கள் நீடிக்கிறது பிரான்ஸ்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து பிரான்ஸில் பிரகடனப்படுத்தப்பட்ட சுகாதார அவசர கால நிலையை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

ஜூலை 24 வரை அவசரகால நிலையை நீடிக்கும் யோசனை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரான்சில் இதுவரை 24,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் இறந்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 17 ஆம் திகதி முதல் நாட்டில் அமுலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை மே 11 அன்று தளர்த்த நாடு தயாராகி வருகிறது.

தொழிலாளா் தினத்யொட்டி வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது என்பது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதைக் குறிக்காது என்று எச்சரித்தார்.

சமூக முடக்கல்களில் இருந்து மெல்ல-மெல்லவே வெளியேற வேண்டும். அதில் ஒரு படியே மே-11 சிறிய தளா்வுகள் என மக்ரோன் கூறினார்.

இதேவேளை எதிர்வரும் 11ம் நாள் பொதுமுடக்கம் பிராந்தியரீதியாக படிப்பிடியாக நீக்கம் செய்யபட இருகின்ற நிலையில், இந்த சுகாதார அவசரகாலை நிலையூடாக அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது.

சுகாதார சேவைக்கு இராணுவத்தினது உதவியினைப் பெறுவது, தனியார் மருத்துவமனைகளை கையாளுவது, கட்டுப்பாடுகளுக்கான தண்டம் விதிப்பது, வெளிநாட்டு மருத்துவர்களை பிரான்சுக்கு உள்வாங்குவது உட்பட பல்வேறு அதிகாரங்களை அரசாங்கத்தக்கு இந்த அவசரகாலநிலை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post