இரண்டாம் சுற்றுத் தொற்றுக்குத் தயாராகியது கொரோனா! பேரழிவைச் சந்திக்கப் போகும் பிரான்ஸ்!!

Nouvelle-Aquitaine மாகாணத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்குள்ள Gérard-Philipe de Chauvigny இல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த கல்லூரியில் 800 மாணவர்கள் கல்விகற்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மூன்று நாட்களின் முன்னர், மே 18ம் திகதி கல்லூரி திறப்பதற்காக ஆசிரியர்கள், பாடசாலைப் பணியாளர்கள் ஒன்று கூடி உள்ளனர்.

இந்த அணி எதேச்சையாக கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, முதலில் நான்கு பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது, மேலும் ஒன்பது பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்ப்பட்டுள்ளது.

இதனைப் பிராந்திய சுகாதார மையம் (ARS) உறுதிப்படுத்தி உள்ளது. இங்கு கல்லூரிகளை திறப்பது மே இறுதிவரை பிற்போடப்பட்டுள்ளது. இது போலவே பிரான்ஸ் முழுவதும், பாலர் பாடசாலைகளும், ஆரம்பப் பாடசாலைகளும் ஆரம்பிக்க உள்ள நிலையிலும், பச்சை என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் 18ம் திகதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையிலும், ஆசிரியர்களும் பாடசாலைப்பணியாளர்களும் முழுமையாக கொரோனாப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படாவிட்டால் பிரான்ஸ் மீண்டும் இரண்டாம் சுற்றுத் தொற்றுக்குள்ளாகி பேரழிவைச் சந்திக்கும் ஆபத்து உண்டு.
Previous Post Next Post