ஊரடங்கு நீக்கிய பின் யாழில் நடந்த வாள்வெட்டு! இருவர் வைத்தியசாலையில்!!

கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால், மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதுடன்இ மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவை அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் இன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில்இ இந்த சம்பவம் வாள்வெட்டுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமி வாள்வெட்டுக்குழுவினர் இன்று மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் புங்கன்குளம் வீதி வழியாக சென்றுள்ளனர். வீதியால் சென்ற போது இவர்களை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள், முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2 ஆட்டோவை சேதப்படுத்தியதுடன்இ இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post