பிரான்ஸில் 13 நாட்களின் பின் வேகம் கொண்டது கொரோனா உயிரிழப்புக்கள்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொடா்பான இறப்புக்களின் எண்ணிக்கை கடந்த 13 நாட்களுக்குப் பின் நேற்று அதிகளவில் பதிவானது.

107 பேரின் உயிரிழப்புக்களை பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் நேற்று அறிவித்தனா். கடந்த இரண்டு நாட்களாக பராமரிப்பு மையங்களில் பதிவான இறப்புக்கள் பதிவு செய்யப்படாத நிலையில் அவை நேற்றைய தரவுகளில் இணைக்கப்பட்டன.

இதுவே நேற்றைய இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய இறப்புக்களுடன் நாட்டின் கொரோனா மரணங்கள் 28 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளன. இது உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையாகும்.

எனினும் தொற்றுக்குள்ளாகும் புதிய நோயாளா்கள் எண்ணிக்கை அங்கு குறைந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று நோயாளா்கள் எண்ணிக்கை மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை அண்மையக் காலங்களில் குறைந்துவரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post