கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு! (படங்கள்)

புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி கடந்த 03 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலை சடலம் கிணற்றிலிருந்து இனங்காணப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மாணிக்கபுரம் கிராமத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது கொலையா தற்கொலையா என்பது தொடா்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post