வாகனத்துக்குக் குறுக்கே பாய்ந்த மாடு! ஏ-9 வீதியில் விபத்து!! (படங்கள்)

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் ஏ-9 வீதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா நோக்கி ஹயஸ் ரக வாகனம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த நிலையில் வீதியின் குறுக்கே மாடொன்று பாய்ந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் மோதிய மாடு சிறு காயங்களுக்கு உள்ளானதுடன், வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இவ் விபத்துச் சம்பவத்தில் வாகனத்தின் முன் பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post