யாழ்.வேலணையில் காணாமல் போன இளம் பெண் மீட்பு! நண்பியும் தாயாரும் கைது!!

யாழ்ப்பாணம் தீவகம் வேலணையைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் பெண் ஒருவரை காணவில்லை என்று குடும்பத்தினர் குடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த பெண் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சின்னமடு என்கிற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளம் பெண்ணை தாயார் கடுமையாகத் தாக்கியதாகவும் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய குறித்த இளம் பெண் சின்னமடுவில் உள்ள தன்னுடைய நண்பியின் வீட்டில் தஞ்சமடைந்திருக்கின்றார்.

நேற்றிரவு அவர் தஞ்சமடைந்திருந்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்ணையும் அவருக்கு தஞ்சம் கொடுத்திருந்த நண்பியையும் நண்பியின் தாயாரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரியவருகிறது.
Previous Post Next Post